நினைவு முத்திரை வெளியீடு
நினைவு முத்திரை வெளியீடு

இலங்கையின் தமிழ் பத்திரிகைத்துறை ஜாம்பவான் என எல்லோராலும் போற்றப்படும் அமரர். எஸ்.டீ.சிவநாயகம் அவர்களை கௌரவிக்கும் வகையில் ஞாபகார்த்த முத்திரை, முதல் நாள் உறை என்பன வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை பத்திரிகைத்துறையின் பொன்விழா நாயகனும், கொழும்பு சத்திய சாய்பாபா மத்திய நிலைய ஸ்தாபகரும், தொடர்ந்து 25 வருடங்கள் அதன் தலைவராக செயற்பட்டு சாய் நிலையத்தை வழிநடத்திய வருமான அமரர் சிவநாயகத்தின் நூறாவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்வுகளை இவ்வருடம் சிறப்பாக நடத்துவதற்கு அவரது ஞாபகர்த்த குழு ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முன்னோடி நிகழ்வாக எஸ்.டி. சிவநாயகம் ஞாபகர்த்த முத்திரையும், முதல் நாள் உறையும் கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப் பெருமவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பயனாக முத்திரை வெளியீட்டுப் பணியகம் இந்த ஞாபகர்த்த முத்திரையை வெளியிட்டுள்ளது.

சிறீ சத்திய சாயி, சீரடிபாபா கொழும்பு மத்திய நிலையத்தில், அறங்காவலர், தலைவர் எஸ்.என். உதயநாயகன் தலைமையில் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான பி. இராதாகிருஸ்ணன் மனோகணேசன் உட்பட பத்திரிகை ஆசரியர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் பல முன்னணி எழுத்தாளர்கள் பலர் உருவாகக் காரணமாகவும், உந்துசக்தியாகவும் திகழ்ந்த அமரர் சிவநாயகத்தினால் புடம் போடப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பலர் இன்று இலங்கையின் தமிழ்ப்பத்திரிகை துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக மிளிர்ந்து வருகின்றனர்.

அன்னாரின் ஞாபகர்த்த முத்திரை வெளியீட்டை ஊடக அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.

நினைவு முத்திரை வெளியீடு

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House