
posted 23rd February 2022
“கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் நிந்தவூர் பிரதேச சபை சிறப்பான உள்ளுராட்சி மன்றமாகத்திகழ்கின்றது. அதன் மக்கள் சேவைகள் விதந்து பாராட்த்தக்கதாகும்.”
இவ்வாறு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் புகழாரம் சூட்டினார்.
உள்ளுராட்சி மன்றங்களின் உள்ளுர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 68இலட்சம் ரூபா நிதியில் நிந்தவூர் பிரதேச சபையால் நிர்மாணிக்கப்பட்ட நிரந்தர பாலர் பாடசாலை (அல்-ஹிக்மா)க் கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிந்தவூர் பிரதேச சபைத்தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி, நிந்தவூர் பிரதேச செயலாளர்சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப், பிரதி தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை, திட்டப் பொறியியலாளர் ஏ.எம். சாகிர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனை வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். றசீன், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எம். சரிபுடீன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அத்துடன் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளுராட்சி மன்றங்கள் இயங்கி வருகின்றன. மக்கள் சேவையாற்றும் இந்த சபைகளில் நிந்தவூர் பிரதேச சபை சிறப்பான உள்ளுராட்சி மன்றமாகத் திகழ்ந்து வருகின்றது. இச்சபையின் மக்கள் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் வினைத்திறன்மிக்க சேவைகள் பெரிதும் பாராட்டத்தக்கவையாக அமைந்துள்ளன. எனவே சரியான தீர்மானங்களுக்கும், சேவை முன்னெடுப்புகளுக்கும் உதவுவது எமது கடமையாகும்.
இன்று திறப்பு விழாக்காணும் செயற்திட்டம் மிகப்பெரிய பணியாகும். இதன் சிறந்த பயன் மூலம் எதிர்கால நற்பிரஜைகள் உருவாக வழிகோல வேண்டும்.
மேலும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடைபெறுவது தொடர்பில் எமக்கு திட்டவட்டமான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நிந்தவூர் பிரதேச சபையை மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுடன் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தும் தவிசாளர் தாஹிர் மற்றும் அவருடன் ஒத்துழைப்பு நல்கிவரும் சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களாவர்” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House