தொடரும் மிதிவெடி -  கண்ணிவெடி அகற்றும் பணிகள்

ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் முகமாலை பகுதியில் முன்எடுக்கப்பட்டுவரும் மிதிவெடி - கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கலந்துரையாடினர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை - அல்லிப்பளை பகுதியில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் சார்ப் நிறுவனத்தினால் மிதிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி மிதிவெடி - கண்ணிவெடி அகற்றும் பணிகளை இன்று புதன்கிழமை அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். அத்துடன், வெடிபொருள் அகற்றலில் இருக்கின்ற தாமதங்கள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பிலும் கேட்டு அறிந்தனர்.

தொடரும் மிதிவெடி -  கண்ணிவெடி அகற்றும் பணிகள்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House