துன்னாலை கிழக்கு நெல் அறுவடை விழாவும் பொங்கல் விழாவும்

வடமராட்சி - துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு கரவெட்டி கமநல சேவை நிலையத்துடன் இணைந்து நடத்திய நாள் நெல் அறுவடை விழாவும் பொங்கல் விழாவும் நேற்று புதன்கிழமை (09) பிற்பகல் 2:30 மணியளவில் துன்னாலை கிழக்கு புளியங்கியான் சிதம்பர விநாயகர் ஆலய முன்றலில் துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு தலைவர் வே. சிவசிதம்பரம் தலமையில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாரம்பரிய முறைப்படி வயலுக்கு சென்று நெல் அறுவடை செய்ததுடன் அதனை கொண்டுவந்து ஆலய முன்றலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ. நிசாந்தன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கரவெட்டி கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் செ. திலீப்குமார், துன்னாலை கிழக்கு புளியங்கியான் விநாயகர் ஆலய அர்ச்சகர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் தர்சன் மற்றும் விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு மண்டபத்துக்கு அழைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதில் ஆசி உரையை ஆலயக் குரு முதல்வர் வழங்கியதை தொடர்ந்து வரவேற்புரை, தலைமை உரை என்பன இடம்பெற்றன.

தொடர்ந்து, கருத்தரையை கரவெட்டி கலநல சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் செ. திலீப் குமார், சிறப்பு உரையை யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ. நிசாந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

துன்னாலை கிழக்கு நெல் அறுவடை விழாவும் பொங்கல் விழாவும்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House