
posted 15th February 2022
யாழ்ப்பாணம் தீவு பகுதிக்கான பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் பல கூட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும், தீவக பொது போக்குவரத்தில் அடிக்கடி படகுகள் பழுதடைவதால் தடைப்படுகிறது. இதேநேரம் பொதுமக்கள் மிகவும் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்ளும்போது பயணமானது மிகவும் அபாயமாகக் காணப்படுகிறது.
தீவகத்துக்கான பொதுப் போக்குவரத்து தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். வீதி அபிவிருத்தி அதிகார சபை படகுகள், பாதை மற்றும் குமுதினி படகை இயக்கி வருகிறார்கள். குமுதினி படகு பழுதடைந்துள்ளது. இதேபோல நெடுந்தாரகை, வடதாரகை, சமுத்திரா போன்ற படகுகள் பிரதேச சபையால், கூட்டுறவு அமைப்பால் இயக்கப்படுகின்றன.
இதேவேளை வடதாரகை இலங்கை கடற்படையினரால் இயக்கப்படுகின்றது. இந்தப் படகுகள் அடிக்கடி பழுதடைவதன் காரணமாக நெடுந்தீவுக்கான போக்குவரத்து அடிக்கடி தடைபடுகிறது.
ஏனைய தீவுகளில் படகு பாதை தற்போது சீரமைக்கப்பட்டு பயணம் தொடர்ந்தாலும் இயந்திரம் பழுதடைந்து நிலைமையில் பாதையை இயக்க முடியாது உள்ளது.
நேற்றும் (14) கூட பொதுமக்கள் பிரதிநிதிகள் இந்த படகு பாதையை சீரமைத்து தருமாறு மகஜர் ஒன்றை கையளித்துள்ள வேளையில் மக்கள் கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.
அண்மைக்காலங்களில் ஊடகங்களிலும் இந்த பிரச்சனைகள் வலுப்பெற்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நாங்களும் வீதி அபிவிருத்தி அதிகார சபை, மற்றும் ஏனைய திணைக்களங்களுடனும், வட மாகாண ஆளுநருடன் இணைந்து சகல தரப்பினரிருடன் கலந்துரையாடல்களை நடத்தி இது பற்றி ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்து இருக்கின்றோம்.
இருந்த போதிலும், சில நடைமுறை சிக்கல்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் காரணமாக அவற்றை முழுமையாக அமுல்படுத்துவதில் சற்று சிரமம் காணப்படுகின்றது. இருந்தபோதிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த படகு போக்குவரத்து சேவை முழுவதையும் பொறுப்பெடுத்து அங்கு ஒரு மத்திய நிலையத்தை அமைத்து, அங்கு ஒரு தகுதிவாய்ந்த பொறியியலாளரின் கீழே அந்த படகு பாதை சேவைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கு உரிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்குரிய முன்மொழிவுகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளரிடம் விடுத்துள்ளோம். அது தொடர்பில் உரிய அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். எனவே, வீதி அபிவிருத்தி அதிகார சபை அமைச்சே இதற்கு முடிவெடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
இருந்தபோதிலும் சில நடைமுறை சிக்கல்கள் சட்ட ஏற்பாடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் முடிவெடுத்து ஒரு தீர்மானம் எடுக்க வேண்டிய கடப்பாடு நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு காணப்படுகின்றது. இதனை துரிதப்படுத்தி பொதுமக்களுக்குரிய சேவையை சீராக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இருந்தபோதிலும் தாமதம் அடைவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். பொதுமக்கள் இதனால் மிகவும் அவதியுறும் நிலையுள்ளது.
இதனை செயல்படுத்த ஒரு விசேட கலந்துரையாடல் மூலம் மேல் மட்டத்துடன் ஒரு தீர்மானம் எடுப்பதற்குரிய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனினும், மாவட்ட மட்டத்தில் பல தடவைகள் கூட்டங்களை நடத்தியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House