தியாகிகள் தினம்

“எமது மக்களுக்கு கௌரவமான, சுதந்திர அரசியல் உரிமையைப்பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற இலட்சிய வேட்கையுடன் போராடி உயிர் நீத்த எமது தியாகிகளின் கனவும், இலட்சியமும் நிறைவேறுவதற்கு இறுதி வரையும் போராடுவோம்.”

இவ்வாறு ஈழமக்கள் புரட்சி கரவிடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) செயலாளரும், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் சூளுரைத்தார்.

கிழக்கிலங்கையின் காரைதீவில் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் “தியாகிகளை நினைவு கூருவோம், இவர் தம் உறவுகளைக் கௌரவிப்போம்” நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஈழ மக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட மத்திய குழு உறுப்பினர் கணபதிப் பிள்ளை சின்னையா (தோழர் சமர்மா) தலைமையில் காரைதீவு லேடிலங்கா வரவேற்பு மண்டபத்தில் உணர்வு பூர்மாகவும், வெகு சிறப்பாகவும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் காரைதீவு வலயத்திலுள்ள காரைதீவு, சம்மாந்துறை, வீரமுனை, வளத்தாப்பிட்டி, அட்டப்பள்ளம், திராய்க்கேணி முதலான பிரதேசங்களைச் சேர்ந்த போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு ஈகை சுடரேற்றி அவர்கள் நினைவு கூரப்பட்டதுடன்,
தியாகிகளின் உறவுகளும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகைச் சுடரேற்றலுடன், புஸ்பா~;சலி, ஒரு நிமிட மௌ அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தோழர் பத்மநாபாவின் திரு உருவப்படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தொர்ந்து உரையாற்றுகையில் பின்ருமாறு கூறினார்.

“நாட்டில் கொவிட் - 19 நிலமை காரணமாக நம் தியாகிகள் தின நிகழ்வை வலய ரீதியாக நடத்தவும், தியாகிகளது உறவுகளை கௌரவிக்கவும் முடிவு செய்து அதன்படியான முதல் நிகழ்வை கிழக்கில் காரைதீவு மண்ணில் நடத்துகின்றோம்.

விடுதலைப்போராட்டத்தில் கிழக்கில் மட்டும் 900 எமது தோழர்கள் இன்னுயிர்களை ஈர்த்து தியாகிகளாகியுள்ளனர்.

தமிழ் மக்கள் கௌரவமாக சுதந்திரமாக எம்மண்ணில் வாழ வேண்டுமெனும் உன்னத இலட்சியத்திற்காகப் போராடியவர்கள் அவர்கள்.

தோழர் பத்மநாபா தலைமையில் கடந்த 34 வருடங்களுக்கு முன் தீர்க்க தரிசனமாக, தியாகத்தால் வடகிழக்கு இணைந்த அரசை உருவாக்கினோம்.
ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஓர் மைல்கல்லாகும். காலத்தால் அழியாத மாபெரும் தியாகங்களைச் சேர்ந்த எம் மறைந்த தோழர்கள் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் தமிழ் மக்களுக்கு கௌரவமான சுதந்திர அரசியல் உரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற அவர்களது தியாக, உயரிய இலட்சியத்திற்காக இறுதிவரை போராடுவோம்” என்றார்.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தோழர் சர்மா, மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவசுந்தரம் புண்ணியநாதன் (கரன்) உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றினர்.

தியாகிகள் தினம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House