தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் -  இரா. சம்பந்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வெள்ளிக்கிழமை 18ம் திகதி மாலை 3.30 மணியளவில் இந்தியா இல்லத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல் துறை முதன்மை செயலாளர் திருமதி பானு பிரகாஷ் ஆகியோரோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனும் அதன் பேச்சாளர். திரு.எம்.எ. சுமந்திரனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினோம்.

இச்சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்ஷ்ங்கர் மற்றும் இந்திய பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோர் அடுத்த மாதம் இலங்கைக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் பற்றி பேசப்பட்டது. அத்தோடு வடகிழக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினை தீர்வு சம்பந்தமாக தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 13ம் திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு முறையை உருவாக்குவதாக இருந்தது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்பண்ணுவதில் இந்தியா தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற அதே வேளையிலே தொடர்ந்தும் இந்தியா அந்த பங்களிப்பை செய்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் திரு. சம்பந்தன் முன்வைத்தார்.

ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் வேறும் பல விடயங்கள் தீர்க்கமாக ஆராயப்பட்டன.

எம்.ஏ.சுமந்திரன் - பா.உ.
பேச்சாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் -  இரா. சம்பந்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House