
posted 17th February 2022
கிழக்கிலங்கையில் கடந்த சில வாரங்களாக மிகமந்தமான நிலையிலிருந்து வந்த கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் பொது மக்கள் திடீர் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக கொவிட்டின் திரிபான ஒமிக்ரோன் பரவல் அதிரித்துவரும் நிலையில் மூன்றாவது தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக் கொள்ளுமாறு கொவிட் தடுப்பு பிரிவினரும், அரசும் வலியுறுத்திவந்த போதிலும் அண்மைக்காலம் வரைபொது மக்கள் பெரிதும் அக்கறைகாட்டவில்லை.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம். தௌபீக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூடபூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் பொது மக்கள் பெரும் அசட்டையாக விருப்பது குறித்துகவலை வெளியிட்டிருந்ததுடன், ஊர்ஜிதமற்ற தவறான தகவல்களையும் வதந்திகளையும் நம்பாது தற்போதய நிலையில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளமுன்வர வேண்டுமெனவும் பொது மக்களைக் கோரியிருந்தார்.
இந்நிலையில் இராணுவத்தினர் பிரதேச ரீதியாக பூஸ்டர் தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கைகளைக் கடந்த சில தினங்களாக முன்னெடுத்ததுடன், முக்கிய இடங்களில் பயணிகளிடம் தடுப்பூசி செலுத்திய அட்டைகளையும் பரிசீலிக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்தனர்.
இதன் எதிரொலியாகவே பூஸ்டர் தடுப்பூசி மட்டுமன்றி முதலாம், இரண்டாம் தடுப்பூசிகளை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களும் திடீரென தடுப்பூசி பெறுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவைச் சேர்ந்த நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த இரு தினங்களாக குறித்த தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கென பெருமளவானோர் படையெடுத்த வண்ணமுள்ளனர்.
குறிப்பாக அதிகமான பெண்கள் வருகை தந்து பூஸ்டர் உட்பட கொவிட் தடுப்பூசிகளைச் செலுத்திச்செல்வதை அவதானிக்க முடிகின்றது.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். கே.எல்.எம். றைசின் நேரடி கண்காணிப்பிலும், அறிவுறுத்தலுக்கமையவும், பொது மக்களுக்கு சிரமமின்றி கிரமாமக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House