
posted 22nd February 2022
ஜனாதிபதி தேர்தலில் வடமாகாணமக்கள் 95 வீதமான வாக்குகளை அளித்து என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள். அவ் வெற்றியைப் பெற்றுத் தந்த வடமாகாண யாழ் மக்களுக்கு நான் மிகுந்த கடமைப்பட்டுள்ளேன். ஆதலால் யாழ் மாவட்ட மக்களை ஒருபோதும் மறப்பதற்கில்லை என முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
யாழ் மாவட்ட சுதந்திரக் கட்சியின் மாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை உடுப்பிட்டித் தொகுதியில் உள்ள கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதம விருந்தினராக மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது யாழ்மாவட்டத்தில் முதலாவது சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக அங்கஜன் இராமநாதனை தந்தமையால்தான் யாழ்மாவட்டத்தில் உடுப்பிட்டித் தொகுதிக்கு வந்துள்ளேன். இதற்காக உடுப்பிட்டித் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இவரது தெரிவு யாழ் மாவட்டத்தில் சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த சாதனை. இது சுதந்திரக்கட்சியின் வெற்றியல்ல. யாழ் மாவட்ட மக்களின் வெற்றி. வடமாகாணத்தில் கடந்த தேர்தலில் ஒரு இளைஞர் எமது கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் போன்ற இளைஞர்களே எமது கட்சிக்குத் தேவை. எனவே, அங்கஜனுடன் அனைவரும் அணிதிரள வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் வடமாகாண மக்கள் 95 வீதமான வாக்குகளை அளித்து என்னை ஜனாதிபதியாக அன்னப்பட்சியில் தெரிவு செய்தார்கள். அந்த வெற்றியைப் பெற்றுத் தந்த வடமாகாண, யாழ் மக்களுக்கு நான் மிகுந்த கடமைப்பட்டவன். நான் உங்களை மறப்பதற்கில்லை.
எனது பதவிக்காலமான 5வருட ஆட்சியில் அதிகமான சேவைகளை உங்களுக்கு வழங்கியுள்ளேன். வடக்குக்கிழக்குக்கென தனியான அபிவிருத்திக்குழுவை உருவாக்கி பெருந்தொகைப் பணத்தை அதன் மூலமான அபிவிருத்திக்குச் செலவிட்டுள்ளேன். இவ்வாறான அபிவிருத்தி கடந்த காலங்களில் இலங்கையின் தெற்குப் பகுதிக்கே இருந்து வந்தது. எனது காலத்தில்தான் வடகிழக்கு அபிவிருத்திக்குழு உருவாக்கப்பட்டது.
வடமாகாண மக்கள் விவசாயத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். வடமாகாண விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் எதிர் கொண்டு ஒழுங்காக விவசாயம் செய்பவர்கள். இவர்கள் கஷ்டமான விவசாயிகள் எனது தலைவர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா யாழ்ப்பாணம் வந்த வேளையில், பெண்கள் மிளகாய் மாலைகள் அணிவித்து கௌரவித்திருந்தார்கள். அது மாத்திரமின்றி 1987 இல்ஹெக்டர் கொப்பேகடுவ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது யாழ்ப்பாணத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே எனது பதவிக்காலத்தில் அங்கஜன் இராமநாதனை பாராளுமன்ற உறுப்பினராக்கி பிரதி விவசாய அமைச்சராக நியமித்து விவசாய மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்புக் கொடுத்திருந்தேன்.
சுதந்திரக்கட்சி ஏழை, எளிய மக்களின்கட்சி, இக்கட்சியில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் அங்கம் வகிக்கிறார்கள். எமது கட்சியில் இனபேதம் கிடையாது. இலங்கை வரலாற்றில் பாரிய அபிவிருத்திகளைச் செய்தது. சுதந்திரக் கட்சிதான் கள்ளம் கபடமற்ற கட்சியே. நாட்டுக்கு இப்போது தேவை அரசில் இருந்து கொண்டு 30 வருடங்களாகத் திருடியவர்கள் இருக்கின்றார்கள். அரசு உடமைகளைக் கொள்ளையடித்தவர்கள் உண்டு.
இப்போது நல்ல தலைவர்களே நாட்டுக்குத் தேவை. நாட்டை அபிவிருத்தி செய்ய இளைஞர்களைக் கட்சியில் ஒன்றிணைப்போம். சுதந்திரக்கட்சியை வலுப்படுத்துவோம். உடுப்பிட்டித் தொகுதி மக்களுக்கு தலை வணங்குகின்றேன். புதிய தலைவரை உருவாக்கியிருக்கிறீர்கள். அதுதான் அங்கஜன் அவரை நாங்கள் மேலே உயர்த்துவோம் என்றார்கள்.
மேலும் அவர் மீனவர்கள் பிரச்சனைகளைப் பற்றி கூறுகையில்;
வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் இன்று உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்
சுதந்திரக் கட்சியானது ஏனைய கட்சிகளை விட ஒரு சிறந்த கட்சியாக எமது கட்சியில் சிறியவர் பெரியவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை அனைவரையும் சமமாக பார்ப்பது எங்களது சுதந்திரக் கட்சியாக அவ்வாறு கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் அதாவது தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு அதிகூடிய ஆசனங்களை ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கின்றது வரலாற்றில் ஒரு முக்கியமான விடயமாகும் அதற்கு நான் அனைத்து உடுப்பிட்டி தொகுதி மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் அத்தோடு எதிர்வரும் காலத்தில் எமது கட்சிக்கு அதாவது மாகாணசபை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் எமது கட்சியை பலப்படுத்துவதற்கு அதிகளவில் மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும் எமக்கு ஆதரவு அளித்தால் நல்ல நிலைக்கு முன்நோக்கி கொண்டு செல்வோம்
தற்போது நாட்டில் மக்கள் அதிகளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் எரிவாயு,பசளை,அத்தியாவசிய பொருள் விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள்
அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது அத்தோடு நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வட பகுதியில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தேன் காணி விடுவிப்பு மற்றும் வீதி புனரமைப்பு போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்திகளை எனது ஐந்து வருட ஆட்சியில் வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னெடுத்திருந்தேன்
எஒன்றை கூறிவைக்க விரும்புகின்றேன் 2015 ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள் அந்த நன்றிக் கடனுக்காக வே நான் எனது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு அதிக தடவைகள் வருகை தந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து இருந்தேன்
அந்த நன்றிக் கடனை நான் என்றும் மறக்கமாட்டேன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு எனது நன்றி கடன் என்றும் இருக்கும் அதை போலவே தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது கட்சியை பிரதிநிதிதுவபடுத்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உடுப்பிட்டி தொகுதி யில் அதிகளவான வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் அவர் ஒரு இளமையான புத்திக் கூர்மையான ஒரு அரசியல்வாதி தற்போது வடக்கில் ஒரு தலைவர் உருவாக்கினார் என்றால் அது எமது சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தான் எனவே அவரை பலப்படுத்துவதன் அதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லிணக்கம் சமாதானம் நிலைமைய ஏற்படுத்தி அவர்களை முன்னெடுத்து இந்த வடபகுதி என்னை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House