
posted 19th February 2022
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வரத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள நாட்டிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்று காரணமாக சுகாதார நடைமுறைகளை கவனத்தில் கொண்டு இம்முறை பாலாவி குளத்தில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது என இது தொடர்பான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் பாடல் தளமான திருக்கேதீஸ்வரத்தில் மகா சிவராத்திரியானது எதிர்வரும் முதலாம் திகதி (01.03.2022) நடைபெறுவதையிட்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இது தொடர்பான உரிய திணைக்களத் தலைவர்களுடனும் திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகரும் திருக்கேதீஸ்வர இணைத் தலைவருமான எஸ்.எஸ். இராமகிருஷணன் அவர்களின் பங்களிப்புடன் வெள்ளிக்கிழமை (18.02.2022) பிற்பகல் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தின்போது சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதாவது இந்த வருடம் நாட்டின் சகல இடங்களிலிருந்தும் பக்தர்கள் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதிலும் இவ் விழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள் முழுமையான கொவிட் தடுப்பூசிகள் பெற்றிருக்க வேண்டும் எனவும் இதற்கு ஆதாரமாக பக்தர்கள் அதற்கான அட்டையை அல்லது தங்கள் கையடக்க தொலைபேசியில் அவ் அட்டையை பதிவு செய்து கொண்டுவர வேண்டும்.
பக்தர்கள் அனைவரும் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலில் வைத்து கடுமையான முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபின்பே ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
மேலும் அங்கு வருகைதரும் ஒவ்வொரு பக்தர்களும், ஏனையோரும் மிகவும் கண்டிப்பான முறையில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதற்கான சகல ஒழுங்குகளும் சுகாதார சேவைகள் திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அமைக்கப்படவுள்ள உணவு வியாபார உணவகங்களிலிருந்து உணவு உண்ண முடியாது. உணவுகள் பார்சல் மூலமாக எடுத்துச் செல்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அத்துடன் இம்முறை சுகாதார நடைமுறையை கவனத்தில் கொண்டு வழமைபோன்று அல்லாது பாலாவி குளத்தில் இறங்கி நீராடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பக்தர்கள் அந்த பாலாவி நீரை பெறுவதற்கு அங்கு நியமிக்கப்பட்டிருக்கும் தொண்டர்கள் மூலம் பாலாவி குளத்திலிருந்து நீரை பெற்றுக்கொள்ள ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இம்முறை நிகழும் சிவராத்திரி நிகழ்வை நேரடியாக வந்து பங்குபற்ற முடியாத பக்தர்களுக்காக, அவரவரது இடங்களிலிருந்து பார்வையிடுவதற்காக நேரடி ஒலிபரப்பு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
பக்தர்களின் நலன் கருதி போக்குவரத்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும்படியும் வேண்டப்பட்டுள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House