சண்முகராஜா மறைவு!

மட்டக்களப்பு பிள்ளையாரடி விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் கள்ளியங்காடு ஆதி ஆஞ்சநேயர் ஆலயங்களின் ஸ்தாபகத் தலைவரும், ஆன்மீக, சமூக சேவையாளரும் மற்றும் வர்த்தக பிரமுகருமான இராசதுரை சண்முகராஜா நேற்று முன்தினம்(15) காலமா னார்.

இவர் மட்டக்களப்பு பயணியர் வீதி ஆஞ்சநேயர் ஹாட்வெயார் மற்றும் ஆஞ்சநேயர் குறூப் ஒவ் கொம்பனி உரிமையாளராகவும், மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ விக்னேஸ்வரர் திருத் தொண்டர் சபையின் தலைவராகவிருந்து ஆன்மீக, கலை மற்றும் கலாசார மேம்பாட் டிற்காக அரும்பணியாற்றியுள்ளார்.

மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் ஆடைத் தொழிற்சாலையொன்றினை நிறுவி, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் யுவதிகள் பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளார்.

இவ்வாறாக மட்டக்களப்பில் சிறந்த தொழில் வழங்குனராகவும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மனஅழுத்தம், கவலை மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்படும் போது அவற்றைப் போக்குவதற்காக கள்ளியங்காட்டில் நவீன தொழில் நுட்பத்துடனான சிறுவர் வளாகம் எனும் விளையாட்டு வளாகமொன்றை அண்மையில் நிறுவியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

சண்முகராஜா மறைவு!

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House