கொரொனாத் தொற்று அப்டேற் (05 - 06.02.2022) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பணத்தில் கொரொனாத் தொற்று

ஒரு வயது ஆண்குழந்தை உட்பட 22 பேருக்கு யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்கள் அனைவரும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரொனாத் தொற்று அப்டேற் (06.02.2022)

சாவகச்சேரி, யாழ்ப்பாணம் மருத்துவமனைகளில் 30 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி. சி. ஆர். அறிக்கையிலேயே இந்த விவரம் வெளியானது.

அறிக்கையின்படி, யாழ். போதனா மருத்துவமனையில் 16 பேருக்கும், சாவகச்சேரி ஆதார மருத்துமனையில் 14 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

வவுனியா பொது மருத்துவமனையில் ஐவருக்கும், வவுனியா தெற்கில் மூவருக்கும், நெடுங்கேணி பிரதேச மருத்துவமனையில் ஒருவருக்குமாக வவுனியா மாவட்டத்தில் 9 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதேபோன்று கிளிநொச்சி பொது மருத்துவமனையில் மூவருக்கும், மன்னார் பொது மருத்துவமனையில் இருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரொனாத் தொற்று அப்டேற் (05 - 06.02.2022) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House