
posted 15th February 2022
டெங்கால் 10வயது சிறுவன் மரணம்
டெங்கு நோய் தாக்கத்தால் தென்மராட்சியில் 10 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.
மீசாலை வீரசிங்கம் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்றுவந்த கொடிகாமத்தை சேர்ந்த வ. அஜய் (வயது 10) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.
டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட இவர் கடந்த வாரம் யாழ். போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த மாணவன் அண்மையிலேயே புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் மேலும் 36 பேர் உயிரிழந்தனர்
இலங்கையில் நேற்று திங்கட்கிழமை கொரோனா தொற்றால் மேலும் 36 பேர் உயிரிழந்தனர் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில், அந்த வகையில், 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 5 ஆண்களும், ஒரு பெண்ணுமாக 6 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15 ஆண்களும் 15 பெண்களுமாக 30 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்து 844 ஆக உயர்வடைந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House