
posted 21st February 2022
கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்தப் பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த போராட்டம் நேற்றும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த பேரணியில் வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொட்டும் மழையின் மத்தியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டிப்போ சந்தியில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயலகத்துக்கான மகஜரை வேலன் சுவாமிகளிடம் கையளித்தனர்.
போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளர் லீலாதேவி,
இந்த போராட்டத்திற்காக பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். குறித்த அழைப்பை ஏற்று பலர் இங்கு வருகை தந்திருந்தனர். ஆனால் இன்றைய போராட்டத்தில் பொதுமக்கள் ஆதரவு தந்திருக்கவி்ல்லை.
ஒரு சில அரசியல்வாதிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு ஒரு செய்தியை நாங்கள் தருகின்றோம். இந்த போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு கடந்த காலங்கள் போன்று இல்லை. உங்கள் வீட்டிலும் இதுபோன்று சம்பவங்களும், காணாமல் ஆக்கப்படுதலும் இல்லாதிருக்கவும், பேரப்பிள்ளைகள், அடுத்த சந்ததிக்கு இவ்வாறு நடந்தேறக்கூடாது என்பதற்காகவுமே நாங்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
உங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள வேப்பம் மரம் அழிக்கப்பட்டு அரச மரம் முளைக்கும்போதுதான் அதனை நீங்கள் உணர்வீர்கள். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பும் எமக்கு போதாது. உண்மையில் இந்த போராட்டத்தை அவர்கள் முன்னின்று நடத்தியிருக்கவேண்டும். அவர்கள் தமது ஆதரவாளர்களை அழைத்து வந்து இந்த போராட்டத்தை வலுப்பெற வைத்திருக்கவேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House