
posted 21st February 2022
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி முன்னெடுத்துவரும், பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரும் கையெழுத்துப் போராட்டம் கல்முனை மாநகரிலும் வெற்றிகரமாக இடம்பெற்றது.
கிழக்கிலங்கையின் முகவெற்றிலை என வர்ணிக்கப்படும் வர்த்தக மையமான கல்முனை மாநகரில், தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கையெழுத்து போராட்ட நிகழ்வில் பெருமளவிலான தமிழ், முஸ்லிம் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கல்முனை பஸ்நிலையத்திற்கு முன்பாக ஆர்.கோ.எம்.வீதி சந்தியில் குறித்தகையெழுத்து வேட்டை இடம்பெற்ற போது கல்முனை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீபும் வருகை தந்து ஒப்பமிட்டதுடன், பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அங்கு உரையும் ஆற்றினார்.
இதன்போது திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், ஞா. சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன் உட்பட பல பிரமுகர்களும் பிரசன்னமாக விருந்தனர்.
இதேவேளை மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட கல்முனை மாநகர சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஹென்ரி மகேந்திரன், அழகக் கோன் விஜயரட்ணம், எஸ். குபேரன் முன்னாள் உறுப்பினர் கு. ஏகாம்பரம் ஆகியோர் தனியே ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கையெழுத்து போராட்டம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டதுடன்.
இம்மாதம் நடைபெறவிருக்கும் கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசைக் கோரும் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கான பிரேரணை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
உறுப்பினர் ஹென்ரி மகேந்திரன் தலைமையில், மாநகர சபை மண்டபத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House