
posted 24th February 2022
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் புதன்கிழமை (23.02.2022) இரவு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது,
இலங்கை கடற்பரப்பாகிய யாழ் பகுதியிலுள்ள காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி இரு இலுவைப்படகுகளில் வந்த 22 இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வியாழக்கிழமை (24.02.2022) அதிகாலை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின் இவர்கள் யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ