
posted 10th February 2022
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது. இது ஆரோக்கியமானது இல்லை” என்று மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் மாவட்ட செயலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று ஜனவரி மாத முற்பகுதியிலிருந்து அதிகரித்து செல்கின்றது. இந்த அதிகரிப்பு ஆரோக்கியமானதாக இல்லை. தற்போது அனைத்துச் செயல்பாடுகளும் - குறிப்பாக, போக்குவரத்து, கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பித்துள்ள நிலையில், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளது என்று சுகாதார துறையினர் எச்சரித்துள்ளார்கள்.
எனவே, சுகாதார அமைச்சு இறுதியாக வெளியிட்ட விதிகளுக்கு அமைவாக பொது மக்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும். மேலும், ஒன்றுகூடல்களை அவசியமற்றதாயின் தவிர்த்துக் கொள்வது நல்லது. மேலும் அவசியமற்ற பயணங்களையும், நடமாட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 62 வீதத்திற்கு மேற்பட்டோர் முதல் கட்ட தடுப்பூசியையும் அதற்கு குறைவானவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். ஆனால், பூஸ்டர் தடுப்பூசியை பெறுபவர்கள் சற்றுக் குறைவாக இருந்தபோதிலும், மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி அதனைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் அதிகமாக காணப்படுகின்றது. புள்ளி விபரத்தின்படி யாழ்.மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது. எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், மலோரியா அபாயம் இருந்தபோதும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் - என்றார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House