கறுப்புக்கொடியைத் தாங்கி துக்கத்தை வெளிப்படுத்திய பல்கலைக்கழக நுழைவாயில்

யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்புத் துணி கட்டப்பட்டு நேற்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் அனுஷ்டித்தனர் என தெரிவிக்கப்பட்டது.

வெள்ளி க்கிழமை முள்ளிவாய்க்காலில் சிவில் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தினத்தை எதிர்க்கும் போராட்டத்துக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு செல்ல தயாரானார்கள். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல முயன்றனர். ஆயினும் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மாணவர்கள் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டதுடன் பரமேஸ்வரன் ஆலயத்துக்கு செல்பவர்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடை விதிக்கப்பட்டது.

சுதந்திர தினம் என கொடியேற்றுகிறீர்கள், ஆனால் பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் செல்ல முடியாதா என மாணவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பினர். பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுபவர்களையே நாங்கள் அனுமதிக்கவில்லை என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில் சுதந்திர தினம் கரி நாள் என தெரிவித்து மாணவர்களால் கறுப்புத் துணி பல்கலைக்கழக பிரதான வாயிலில் கட்டப்பட்டது.

கறுப்புக்கொடியைத் தாங்கி துக்கத்தை வெளிப்படுத்திய பல்கலைக்கழக நுழைவாயில்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House