
posted 12th February 2022

டாக்டர். ஏ.ஆர்.எம்.தௌபீக்
“தனியார் எனும் வட்டத்திற்குள் நிற்காது கருணை, சேவை மனப்பாங்குடன் தனியார் வைத்தியசாலைகள் செயற்பட வேண்டும். அரசு சுகாதார அமைச்சின் நிருவாக கட்டமைப்பின் கீழ், தனியார் வைத்தியசாலைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் எமக்கு உண்டு.”
இவ்வாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம்.தௌபீக் கூறினார்.
கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த 37 வருடகால மருத்துவப்பணியாற்றிவரும், கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகர்த்தவைத்தியசாலையின் 2 ஆவது பிரிவு ஒன்றை (கிளை) சாய்ந்தமருது பிரதான வீதியில் (மாளிகா வீதி முன்பாக) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கல்முனை டாக்டர். ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை பணிப்பாளரும், பிரபல சமூக சேவையாளருமான டாக்டர். றிஸான் ஜெமீலின் முன்மாதிரி திட்டத்திற்கமைய தமது வைத்தியசாலையின் சேவையை மக்களின் காலடிக்கு கொண்டு செல்லல் எனும் நோக்கில் இந்த வைத்தியசாலை (பிரிவு – 2) சாய்ந்தமருதில் தற்கால நவீன மருத்துவ வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டது.
பணிப்பாளர் டாக்டர். றிஸான் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். தௌபீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைத்திசாலையை வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஐ.எல்.எம். றிபாஸ் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். தௌபீக் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்களின் சேவை முக்கியத்துவமும் இன்று உணரப்பட்டுள்ளது.
இதனையொட்டி அரச சுகாதார அமைச்சின் நிருவாகக் கட்டமைப்பில் இணைந்ததாக பாரிய பொறுப்புக்கள் எமக்கு உள்ளது.
இவற்றை சம்பந்தமில்லாத விடயமாக நாம் தட்டிக் கழித்து விடமுடியாது. இந்த வகையில் தனியார் வைத்தியசாலைகள், மருத்துவ சேவை நிலையங்களை மக்கள் சேவைக்கென நெறிப்படுத்தும் பொறுப்பிலும் நாமுள்ளோம்.
இந்த வைத்தியசாலையின் ஸ்தாபகர் மர்ஹ{ம் டாக்டர். ஏ.எம்.ஜெமீல் தமது வைத்திய சேவையுடன் மட்டும் நின்று விடாது, மக்களுக்கு நன்மை பயக்கும் பெரும் பொதுப்பணிகளிலும் முன்னின்று உழைத்த பெருந்தகையாவார்.
இத்தகைய தந்தை வழியே அவரது புதல்வாரன பணிப்பாளர் டாக்டர் றிஸானும் சிறந்த பணிகளை இன்று தொடர்ந்து வருவது பாராட்டுதலுக்குரியதாகும்.
எனினும் தனியார் சேவை என்றவகையில் குறுகிய வட்டத்திற்குள் பணம் கறக்கும் இடமாகவும், நோக்காகவும் கொள்ளக் கூடாது. கருணை, சேவை மனப்பாங்கே இங்குமேலோங்க வேண்டும்.
இந்த வகையில் டாக்டர். றிஸான் ஜெமீலின் முயற்சிகளும், நோக்கும், செயற்பாடுகளும் பெரிதும் பாராட்டத்தக்கதாகும்” என்றார்.
வைத்தியசாலையின் தவிசாளர் ஹனீனா றிஸான், சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர். சனூஸ் காரியப்பர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் ஜெயசிறீல், நிறுவன பிரதானி டாக்டர்.எம்.ஏ.எம்.முனீர் ஆகியோரும் உரையாற்றினர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House