
posted 24th February 2022

அப்துல் ஹமீட் தஸ்தீக்
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி, காணி அபிவிருத்தி திறன், மனித வள அபிவிருத்தி, மகளிர் விவகார, நீர் வழங்கல் அமைச்சின் பிரதம கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீட் தஸ்தீக், இன்று (24) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருகோணமலையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
மருதமுனையை சேர்ந்த இவர் கடந்த 06 வருடங்களாக கல்முனை மாநகர சபையின் கணக்காளராக கடமையாற்றி வந்த நிலையில், இப்புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவையில் இணைந்து கொண்ட இவர் பல அரச நிறுவனங்களில் கணக்காளராக சேவையாற்றி, சுமார் 14 வருட அனுபவங்களை கொண்டிருக்கிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்துறையில் முதுமானிப் பட்டத்தை பெற்றுக் கொண்டதையடுத்து இவர் கணக்காளர் சேவை தரம் ஒன்றுக்கு நியமிக்கப்பட்டதுடன் பிரதம கணக்காளர் பதவிக்கு தகுதி பெற்றிருந்தார்.
அத்துடன் நிதி முகாமைத்துவம் தொடர்பாக மலேசியா, சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பயிற்சி நெறிகளிலும் கணக்காளர் தஸ்தீக் பங்குபற்றி, தேர்ச்சியடைந்துள்ளார்.
இவரது திறமை, விவேகம் மற்றும் அனுபவங்களை கவனத்தில் கொண்டு, கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் மாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் அலுவலகத்தில் பதில் கணக்காளராகவும் நியமிக்கப்பட்டு, கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House