கட்டாக்காலிகள் தொல்லை

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய பிரதேசங்களுள் ஒன்றான நிந்தவூர்ப் பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

நிந்தவூர்ப் பிரதேசத்தின் பிரதான வீதியில் மட்டுமன்றி மக்கள் நடமாட்டம் மிகுந்த உள்ளுர் வீதிகளிலும் கட்டக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது.

குறிப்பாக இரவு வேளைகளில் பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், பிரதான வீதியின் இரு மருங்குகளிலுமுள்ள வர்த்தக நிலையங்களின் முற்றங்கள் அவற்றின் உறைவிடமாகவும் மாறியுள்ளது. இதனால் வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை அனுபவித்தும் வருகின்றனர்.

இதேவேளை உள்ளுர் வீதிகளில் நிந்தவூர் வைத்தியசாலை வீதியின் முக்கிய சந்திகளை இரவு, பகலாகக் கட்டாக்காலி மாடுகள் ஆக்கிரமித்துள்ளன.

இதனால் அவசர நோயாளர்களை ஏற்றிவரும் அம்புலன்ஸ் வண்டிகள் மட்டுமன்றி, நோயாளர்களை வைத்தியசாலைக்கு ஏற்றிவரும் தனியார் வாகனங்களும் இக்கட்டுக்காலிகளால் பெரும் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றன.

சில சமயங்களில் இக்கட்டாக்கலிகள் வீதியைக் குறுக்கறுத்து விபத்து சம்பவங்களும் ஏற்படும் அச்ச நிலமையும் ஏற்படுகின்றது.

மேற்படி கட்டாக்காலி மாடுகளின் தொல்லை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையின் கடந்தமாத அமர்வில் உறுப்பினர்களால் பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும், இது விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

பிரதேச சபை நிர்வாகம் இக்கட்டாக்காலி மாடுகளின் தொல்லையை ஒழிக்க கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டுமெனப் பொது மக்கள் கோருகின்றனர்.

கட்டாக்காலிகள் தொல்லை

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House