கச்சதீவு அந்தோனியார் கோவிலுக்கு வரலாமா? | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் பிரதிநிதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

திருவிழாவில் கலந்து கொள்ளும் இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையில் கலந்துரையாடலை நடத்தி இரு நாடுகளின் கடற்றொழிலாளர்களினதும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் அமைச்சர் பிரஸ்தாபித்தார் என்று அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் இந்தியாவில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கு கொரோனா தொற்று அச்சத்தால் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆலோசனையின்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் பேசினார்.

இதன்போதே மேற்படி விடயங்களை தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது.

கச்சதீவு அந்தோனியார் கோவிலுக்கு வரலாமா? | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House