
posted 25th February 2022
எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் – பிரதேச செயலகம் முன்றலில் போராட்டம் நடத்த வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானம்!
எஸ் தில்லைநாதன்
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுக்கவும் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வலி தெற்கு பிரதேச செயலகம் முன்றலில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இன்றையதினம் வலி தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில் பல அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இடையூறாக உள்ளதாகவும் அவர்களின் தன்னிச்சையான முடிவுகளால் மக்கள் பல அவலங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அதிகளவான் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக வட்டாரத்துக்கு நான்கு மில்லியன் முன்மொழிவுகளை அரியல் நுழைவு இன்றின் வட்டாரத்தின் பிரதிநிதிகள் ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள் நிலையில் அது யாழ்ப்பாணத்தில் மட்டும் மாவட்ட ஒருங்கிணைப்பு முழுவின் முடியாக இருக்க கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
நாடு முழுவதும் ஒரே நடைமுறை என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்த உறுப்பினர்கள், ஆனால் இவ்வாறான மக்களின் முன்மொழிவு நடைமுறை யாழ்ப்பாணத்தில் மட்டும் காணப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்ததுடன் இவ்வாறான நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்திய உறுபினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரதும் அவர் சார் தரப்பினரதும் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மக்களின் தேவைகளை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
அத்துடன் இது தொடர்பில் நிதி அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் அறிவிக்கவுள்ளதுடன் அதை எதிர்த்து பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் புதனன் குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வதென சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House