ஊடக சேவைக்கு பாராட்டு நிகழ்வு
ஊடக சேவைக்கு பாராட்டு நிகழ்வு

சின்னத்துரை தில்லைநாதன்

இலங்கையின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன், ஊடகத்துறையில் ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்தமைக்காக நாளை 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அவரது அளப்பரிய ஊடக சேவையைப்பாராட்டி) கௌரவிக்கப்படவுள்ளார்.

அல்வாய், மாலைச் சந்தை மைக்கல் நேசக்கரம் - மைக்கல் விளையாட்டுக் கழகத்தலைவர் த. வேணுகானன் தலைமையில், அல்வாய், மாலைச் சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக பொதுமண்டபத்தில் நிகழ்வு நடைபெறவுள்ளது. நிகழ்வில், வட மாகாண சிரேஷ்ட ஊடகவியலாளர் இ. தயாபரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதுடன், ஊடகவியலாளர்களான ந. பொன்ராசா, எஸ். மகாலிங்கம், க. கனகராஜா, புதுக்களம் மகாவித்தியாலய ஆசிரியர் க. உதயராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் (வயது 71) 1968ஆம் ஆண்டு கண்டியிலிருந்து வெளியான தமிழ் ஊடக மொன்றில் செய்தியாளராக இணைந்து செய்தியாளராக, சுயாதீன கட்டுரையாளராக ஊடகத்துறைக்குள் காலடிவைத்தார்.

அதனோடு இணைந்ததாக அண்மித்த காலப்பகுதியில் யாழ் - ஈழ நாடு பத்திரிகையில் நெல்லியடி செய்தியாளராகவும் துடிப்புடன் இயங்கிய அவரது ஊடக சேவையை 1972ஆம் ஆண்டிலிருந்து வீரகேசரி பெற்று இன்று வரையும் சேவை தொடர்கின்றது.

1987 இல்லிபரேஸன் ஒப்பரேஸன் உட்பட பல்வேறுகால கட்டங்களில் வடமராட்சி கிழக்கு செய்தியாளராக இருந்த போதிலும், யாழ் நகர முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகளைத் திரட்டவும் வீரகேசரியால் பணிக்கப்பட்டு பொறுப்புடனும் பாராட்டும் படியும் தன் ஊடக சேவையை முன்னெடுத்தார்.

மக்களின், வடக்கின் பல்வேறு பிரச்சினைகளை துணிச்சலுடனும், ஊடகதர்மத்துடனும் வெளிக்கொணர்ந்த அவரது பலசெய்திகள் தலைப்புச் செய்திகளாக வெளியாகி வரலாறு படைத்தன.

நெருக்கடியான கால கட்டங்களில் தமது ஊடகப் பணியைத் தொடர்ந்தமைக்காக லண்டன் உட்பட மேலும் சில நாடுகளின் அமைப்புகளால் கௌரவிக்கப்பட்ட தில்லைநாதான் உள்ளுரிலும் பல அமைப்புகளின் கொளரவங்களையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

யாழ் உதயன் பத்திரிகையின் செய்தியாளராகவும் நீண்டகாலம்பணியாற்றிய அவர், தற்சயம் ஈழநாடு பத்திரிகையையும் இணைத்துக் கொண்டுள்ளார்.
ஆரம்பகாலங்களில் வடக்கின் வாசைன கொண்ட பணாட்டுப்பாயில்படுத்த வண்ணம் செய்தி எழுதிய தமது எளிமையை என்றும் பெருமையுடன் கூறும் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதனுக்கு, கலாபூணம் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது போன்றவையும் கிடைக்க சம்பந்தப்பட்டோரின் கவனம் திரும்புமா? எனப் பலரும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

“தேனாரம்” இணையத்தின் யாழ் பிராந்திய செய்தியாளரான அன்னாருக்கு எடுக்கப்படும் விழா சிறக்க வாழ்த்துவதில் மகிழ்வடைவோம்!

ஊடக சேவைக்கு பாராட்டு நிகழ்வு

ஏ.எல்.எம்.சலீம்)

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House