உழைப்புக்கு மதிப்பு

உள்ளுராட்சி மன்றங்களின் உள்ளுர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச சபையால் நிர்மாணிக்கப்பட்ட பாலர் பாடசாலை கட்டிட முதற்கட்ட வேலை பூர்த்தியுடனான திறப்பு விழா நேற்று செவ்வாய் பிற்பகல் கோலாகலமாக நடைபெற்றது.

மேற்படி 68 இலட்சம் ரூபா நிதியில் கட்டி முடிக்கப்பட்ட நிரந்தர பாலர் பாடசாலைக் கட்டிட திறப்பு விழாவில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவிற்கு வருகை தந்த பிரதம அதிதி உட்பட அதிதிகள் பலரும் மாலைகள் அணிவித்து முன்றலில் வரவேற்கப்பட்டனர்.

பிரதம அதிதி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணனுக்கு நீளமான மலர்மாலை ஒன்றும் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

சம்பிரதாய பூர்வமாக பாலர் பாடசாலைக் கட்டிடம், மற்றும் பிரிவுகள் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டபின் அதிதிகள் வந்து அமர்ந்ததும் பெரும்பாலானவர்கள் தமக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைக்கழற்றி வைத்தனர்.

ஆனால் பிரதம அதிதி மணிவண்ணன் மட்டும் தமக்கு அணிவித்து வரவேற்கப்பட்ட மலர் மாலையை, திறப்பு விழாப்பொதுக்கூட்டம் முடியும் வரையான சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் தமது கழுத்திலிருந்து கழுற்றாது மாலையுடனேயே அமர்ந்திருந்ததைப் பலரும் வியப்புடன் அவதானித்த வண்ணமிருந்தனர்.

கூட்டத்தில் இறுதியாகவே பிரதம அதிதி மணிவண்ணன் உரையாற்ற அழைக்கப்பட்டபோதும், அவருக்கு அணிவிக்கப்பட்ட மலர் மாலையுடன் வந்தே உரையாற்றினார்.

உரையின் இறுதியில், மிக நீண்ட நேரம் மாலையை கழற்றி வைக்காது கழுத்திலேயே அணிந்திருந்தது ஏன் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாகவே அவர் கூறியதும் பலரும் வியந்துபோயினர்.

“ஏதோ புதுமாப்பிளை போல் கற்பனையில் அப்படியிருக்கவில்லை எனக்காக அணிவித்த இப்பெரிய மாலையைக்கட்டுவதற்கு பூக்களை சேகரிப்பதிலும், அதனை மாலையாக கோர்வை செய்வதிலும் ஈடுபட்டவர்களின் சிரமங்களையும், இதன் மூலம் என்மீது காட்டிய பேரன்பையும், அபிமானத்தையும் உணர்ந்தேன்.

அதனால் அணிவித்த சொற்ப நேரத்திலேயே மாலையை கழற்றி வைத்துவிட மனம் இடம்தரவில்லை.

இந்த மாலையைக் கட்டியவர்களின், அதனை உவகையுடன் அணிவித்தவரகளின் உழைப்புக்கும், அன்புக்கும் மதிப்பளிப்பதற்காகவே மாலையை இறுதி வரை அணிந்துள்ளேன்” என காரணத்தைப்புட்டு வைத்தார் மணிவண்ணன்.

உழைப்புக்கு மதிப்பு

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House