
posted 21st February 2022
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2022ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
“இரண்டு தேசங்கள் இணைந்த ஒரு நாடு என்ற அரசியல் தீர்வும், அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும், வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பக்கசர்பற்ற விசாரணை கோரி தொடர்ந்து போராடுவோம், இன அழிப்பு, போர் குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கசார்பற்ற விசாரணை வேண்டும், போரின் பின்னரும் தொடர்ந்தும் கட்டமைப்பு சார் இனஅழிப்பு செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், எல்லைகள் மாற்றி அமைத்து பிரதேச மட்டத்தில் உள்ள நிர்வாக அலகுகளுக்கு தமிழர்களை சிறுபான்மையினர் ஆக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த போராடுவோம், தமிழ்த் தேசத்தின் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாப்போம், தமிழர்தேச வரலாற்றை சிங்களமயமாக்க முயலும் சதிமுயற்சிகளை முறியடித்து செயலாற்ற வேண்டும்.
மலையக மக்களின் உரிமைகளுக்காக இணைந்து குரல் கொடுப்போம், கிராமிய உழைப்பாளர்கள் எதிர்நோக்கும் சமூகமாற்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நாமும் இணைந்து குரல்கொடுப்போம், முன்னாள் போராளிகளையும் மக்களையும் வறுமையில் இருந்தும், பாதிப்புக்களில் இருந்தும் மீட்டெடுக்க உழைப்போம், சமூகசீரழிவுக்கு எதிராக போராடுவோம், போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறை கலாசரத்திற்கு எதிராகப் போராடுவோம் என கட்சியின் கொள்கைப் பிரகடனம் இதன்போது வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், கட்சியின் உபதலைவர் சுரேஷ், கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணிகள் க. சுகாஸ், காண்டீபன், உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House