இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற நடப்பு வருட நிர்வாகத் தெரிவில் வீரகேசரியின் பிரதம செய்தி ஆசிரியர் எஸ். ஸ்ரீகஜனும் செயலாளராக கே. ஜெயந்திரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் ஞாயிற்றுக்கிழமை (20.02.2022) காலை 10 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்க கலாவினோதன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நடப்பு வருட புதிய தலைவராக எஸ். ஸ்ரீகஜன் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக கே. ஜெயந்திரனும் உப தலைவர்களாக லியோ நிரோஷ் தர்ஷனும், செல்வி தர்மினி பத்மநாதனும் உப செயலாளராக க. சிவசண்முகநாதனும் பொருலாளராக ப. விக்னேஸ்வரன் உப பொருளாளராக எல்.ஜி. வாஸ் கூஞ்ஞ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ் அமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஆர் சிவராஜா என். அனந்த் பாலகிட்ணர், என். ஜெயகாந்தன் வீ. பிரியதர்ஷன் ஆர். சேதுராமன் கி. லக்ஸ்மன் சிசில், செல்வி பிரியங்கா சந்திரசேகரம், கே. ஹரேந்திரன், கே. பிரசன்னகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மாகாண ரீதியில் வடமாகாண இணைப்பாளராக கணபதி சர்வானந்தா கிழக்கு மாகாண இணைப்பாளராக எஸ். சரவணன் மற்றும் மலையக இணைப்பாளராக சிவலிங்கம் சிவகுமாரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு.

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House