இன்னொரு நாட்டு மீனவர்கள் இங்கு தொழில் செய்யத்தடுக்கும் தடைச்சட்டம் உள்ளது

இந்திய இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய அத்துமீறலை தடுத்து நிறுத்துவதற்கு தகுதி வாய்ந்த அதிகாரிகள் உத்தரவாதத்தை எழுத்து மூலமாக வழங்க வேண்டும். அதுவரை மீனவ சமுதாயத்தின் போராட்டமானது தொடர்ந்து இடம்பெறும் எனவும், இப் போராட்டத்தை வடமாகாண ரீதியில் விரிவுபடுத்த பொது அமைப்புகள் ஆதரவு வழங்க வேண்டுமெனவும் இப்போராட்டத்திற்கு கடற்றொழிலாளர் சமாசம், சம்மேளனத்தினருக்கு எந்தவித தொடர்பும் இல்லையென சுப்பர்மடம் மீனவர் சமுதாய அமைப்பு தெரிவித்துள்ளது

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் காரணமாக வலைகள் நாசமாக்கப்பட்டதையும் வத்திராயன் பகுதியில் 2 மீனவர்கள் உயிரிழந்தமைக்கு நீதி வேண்டியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வடமராட்சியில் இன்று புதன்கிழமை (02) மூன்றாவது நாளாக தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

சுப்பர்மடம் பகுதியில் வீதியில் பந்தல் அமைத்து இடம்பெற்றுவரும் வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுப்பர்மடம் மீனவ சமுதாய அமைப்பின் பிரதிநிகள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது வடபகுதி கடற்பரப்பில் எல்லை மீறும் இந்திய படகுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது குறித்து உத்தரவாதத்தை தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக வழங்க வேண்டும். அதுவரை மீனவ சமுதாயத்தின் போராட்டமானது திட்டமிட்ட வகையில் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் தொடரும். தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக எமது கடல் வளம் அழிக்கப்பட்டு, எமது வாழ்வாதாரம் நாசமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரு உயிர்களையும் கொடுத்திருக்கும் இந்நிலையில், இந்த அவலத்திற்கு நிரந்தர தீர்வு காணும் வரை மீனவர் சமுதாயம் பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் தொடர்சாலை மறியல் மற்றும் கடற்றொழில் மறிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருவோம்.

இப் போராட்டமானது பாதிக்கப்பட்ட மீனவ சமூகம் ஒன்றிணைந்து மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு சமாசத்திற்கோ மற்றும் சம்மேளத்தினருக்கோ எவ்வித தொடர்புமில்லை. மக்களால் தொடரப்படும் இப் போராட்டமானது, மீனவர்களுக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடரும்.

மேலும் இப்போராட்டத்தை வட மாகாணம் தழுவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு பொது அமைப்புகளிடம் ஆதரவு கோரி நிற்கின்றோம். இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட சமூகமாக நாம் இழப்புக்களையும், துயரங்களையும் சந்தித்து வருகின்றோம். இந்த துயரத்துக்கு முடிவு கிடைக்கும் வரை நாம் முன்னெடுக்கும் இப் போராட்டத்திற்கு வடமாகாணத்திலுள்ள வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து அமைப்புகள், மற்றும் பொது அமைப்புகள் ஆதரவு வழங்குமாறு வேண்டுகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

தேசியமீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதி கருத்துத் தெரிவிக்கையில்;
இன்னொரு நாட்டு மீனவர்கள் இங்கு தொழில் செய்யத்தடுக்கும் தடைச்சட்டம் உள்ளது. ஆனால் அரசு அச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில்லை இந்தியாவைக்காப்பாற்றுவதும், இந்திய - இலங்கை மீனவர்களிடையே பிரிவினையை ஏற்ழடுத்துவதுமே அரசின் நோக்கமாக இருப்பது போலத் தெரிகிறது. எனவேதான் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமுடியவில்லை.

நாங்கள் ஒற்றுமையாகப்போராடினால் தான் வலுவுள்ளவர்களாக இருக்கமுடியும். போராட்டம் இல்லாமல் தீர்வு தரமாட்டார்கள். எனவே, மீனவர்களின் போராட்டத்திற்க தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம் ஆதரவு வழங்கும் என்றார்.

இன்னொரு நாட்டு மீனவர்கள் இங்கு தொழில் செய்யத்தடுக்கும் தடைச்சட்டம் உள்ளது

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House