
posted 23rd February 2022
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர்ப் பிரதேசத்தில் இனம்தெரியாத கும்பலொன்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், பொது மக்கள் விழிப்புடனிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் சார்பில் நம்பிக்கையாளர்சபை இந்த எச்சரிக்கையுடனான விழிப்பூட்டல் அறிவிப்பை விடுத்துள்ளது. நிந்தவூர் பொது மக்களுக்கு ஜும்ஆபள்ளி வாசலால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அண்மைக்காலமாக நிந்தவூர் பிரதேசத்தில் இனம் தெரியாத ஒரு கும்பல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது.
இக்கும்பல் வாகனத்தில் (வேன்) வந்து, வாகனத்தைப் பிரதான வீதியில் அல்லது வேறு எங்காவது மறைமுகமான இடங்களில் நிறுத்திவிட்டு, ஊருக்குள் உள் நுழைவதாகவும், இவ்வாறு உள் நுழைந்து பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், நம்பத்தகுந்த செய்திகள் தற்போழுதுகிடைத்துள்ளன.
எனவே, பொது மக்கள் இது தொடர்பில் விழிப்புடனிருக்குமாறும், அவ்வாறான சந்தேகத்திற்குரியவர்கள் நடமாடுவதைக் கண்டால் உடனடியாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அவசரமாகத்தக்கவல் வழங்குமாறும் கோருகின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House