இந்திய மீனவர்களின் தொடர் தொல்லைகளால் விரக்தியுற்றவர் தனது வலை படகுதனைத் தீக்கிரையாகின மீனவர்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் தொடர்ந்தும் கடற் தொழில் செய்ய முடியாது எனத் தெரிவித்து தனது படகு மற்றும் வலைகளை எரித்து அழித்துள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (03) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி கடற்தொழிலாளி சுனாமி அனர்த்தத்தின் காரணமாக படகு, வலைகள் முற்றாக இழந்திருந்த நிலையிலும் அவருக்கு எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலும் மனம் தளராமல் தொடர்ந்தும் கடல் தொழில் செய்து வந்த இவர் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் காரணமாக தொடர்ச்சியாக சொத்து அழிவுகளை சந்தித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

இலங்கை அரசாங்கமும், கடற்படையும் இந்திய இழுவைப் படகுகளை ஒருபோதும் தடை செய்யப் போவதில்லை. எனவே கடலில் இறங்கி தொழில் செய்ய முடியாது. இதனால் படகு, வலைகளை வைத்திருந்து எவ்வித பிரயோசனமும் இல்லை என தெரிவித்து தனது பயன்பாட்டில் உள்ள மீன்பிடி படகினையும் வலைகளை தீயிட்டு எரித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் தொடர் தொல்லைகளால் விரக்தியுற்றவர் தனது வலை படகுதனைத் தீக்கிரையாகின மீனவர்

எஸ்தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House