இந்திய 139 இழுவைப்படகுகள் விற்பனையில்

இந்திய மீனவர்களது 139 இழுவைப்படகுகள் 59 இலட்சம் ரூபாய்க்கும் மேலாக விற்பனை!

காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களது இழுவைப்படகுகள் இன்றைய தினம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளாக இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களது இழுவைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் குறித்த படகுகள் மீதான நீதிமன்ற செயற்பாடுகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் அவற்றினை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அந்த வகையில் இன்றைய தினம் குறித்த படகுகள் ஏலத்தில் விடப்பட்டன.

142 வரை இலக்கம் இடப்பட்டிருந்த 139 படகுகள் இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டன. அந்த வகையில் 139 படகுகளும் ஐம்பத்தொன்பது இலட்சத்து ஐம்பதாயிரத்து ஐந்நூறு ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டன.

அதில் L 42 என இலக்கமிடப்பட்டிருந்த ஒரு படகு மாத்திரம் 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம், புத்தளம், கொழும்பு மற்றும் நீர்கொழும்பு என பல பகுதிகளில் இருந்து வருகை தந்தோர் இந்த படகுகளை ஏலத்தில் கொள்வனவு செய்து சென்றுள்ளனர்.

இந்திய 139 இழுவைப்படகுகள் விற்பனையில்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House