
posted 17th February 2022

சோ. கணேசமூர்த்தி
19 ஆவது அரசியலமைப்பு அரசியல் சரத்துக் கொண்டு வரப்பட்டு, நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ. கணேசமூர்த்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடல் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டதாவது;
எம்மால் உயிர்ப்பிக்கப்பட்ட ஜனநாயகத்தை தற்போதுள்ள அரசு மரணிக்கச் செய்துள்ளது. ஆணைக்குழுக்கள் அனைத்தும் சுதந்திரமற்ற நிலையில் காணப்படுகின்றன. எனவே ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு கடந்த நல்லாட்சியில்தான் அடித்தளமிடப்பட்டது.
தற்போதைய நிலையில் 20ஆவது சரத்தைக் கொண்டு வந்து அவையனைத்தையும் தவிடு பொடியாக்கி விட்டனர். அத்தோடு தற்போதைய அரசாங்கம் பசளை இறக்குமதியை நிறுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தினைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
நாம் கடைகளில் எந்தப் பொருளைக் கொள்வனவு செய்யச் சென்றாலும், வரிசையில் நின்றே பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தற்போது வரிசை யுகமே காணப்படுகின்றது. இவற்றைக் கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளார்கள்.
இதற்கான ஒரே வழி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டு, எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஸ்திரமான அரசை நிறுவுவதுதான். இதற்கு மக்கள் அனைவரையும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House