
posted 5th February 2022
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் அரசாங்கம் பல ஏமாற்று வேலைகளை செய்கிறது. இதனை உணர்ந்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன். நேற்று கொக்குவிலில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் அரசியல் கைதிகள் 10 தொடக்கம் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடுகிறார்கள். இவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்வதேச ரீதியில் வருகின்ற நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு பல ஏமாற்று நடடிக்கைகளை இலங்கை அரசாங்கம் செய்கின்றது.
குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டமானது சர்வதேச நியமங்களுக்கு முரணான - மோசமான சட்டம் என்பதை ஐ. நா. மனித உரிமைகள் பேரவை உட்பட பல்வேறுபட்ட சர்வதேச சமூக அமைப்புகள் பல்வேறுபட்ட விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளன.
இது தொடர்பான குற்றச்சாட்டுகளை நாங்களும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம். இத்தகைய நிலையில் அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தாங்கள் இதனை மாற்றி அமைப்போம் என்று வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்கள். ஆனால், இன்று வரை அந்த சட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை. எங்களுடைய நிலைப்பாடு இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
இந்த சட்டம் முழுமையாக நீக்கப்படும்போது அதன் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை மாற்றி அமைக்கிறோம் என்று கூறிக்கொண்டு பலவித ஏமாற்று வித்தைகளை செய்துவருகின்றது.
குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் 16 அரசியல் கைதிகளை விடுவித்துள்ளார்கள். ஆறு மற்றும் எட்டு மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட வேண்டியவர்களையே அரசாங்கம் விடுவித்தது. மாறாக நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை.
புலிகளை மீளுருவாக்க முயற்சித்தார்கள், சமூக வலைத்தளங்களில் பிரபாகரனின் படத்தை பதிவேற்றினார்கள் என்ற குற்றச்சாட்டுகளில் சுமார் 100 பேர் வரை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர்கள் நெருங்கி வருகின்ற வேளையில் இவர்களை விடுவித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்தமை போன்று போலியான முகத்தை காண்பிப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சர்வதேச சமூகம் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையான கண்காணிப்பை செய்ய வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House