
posted 26th February 2022
மொறட்டுவையில் வாழும் 80 வயது வயோதிபப் பெண் ஒருவர் பிரத்தியேக மருத்துவ மனைக்கு இரத்தச் சோதனைக்குச் சென்றபோது அவருக்கு பீ சி ஆர் பரிசோதனை மூலம் கோவிட் எனக் கண்டறியப் பட்டது.
கவலையுடன் வீட்டிற்குத் திரும்பிய அவருக்கு மறுநாள் எதிர்பாராத அதிர்ச்சி வந்தது.
அவருடைய உறவுகள் கிராம சேவகருக்கு அறிவித்து அவரது பீ சி ஆர் பரிசோதனையைச் சொன்னார்கள். இதனை அறியாத அவ்வயோதிபருக்கு வாசலில் அம்புலனஸ் வந்து நின்றது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
அம்பலன்ஸைக் கொணர்ந்தவர்கள் விரைந்து வந்து உடனடியாக ஏறும்படி வற்புறுத்தவே வயோதிபப் பெண் நோயாளி அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சியை ஜீரணிக் முடியாமல் திகைத்திருக்கையில், எதுவும் எடுக்க நேரம் கிடைக்காததால் அவரின் உதவிக்கு நின்ற பெண்ணுடன் மெதுவாகப்படியிறங்கிச் சென்றார்.
இருவரையும் ஏற்றிக் கொண்டு அம்பலன்ஸ் அயலில்லுள்ள அரசாங்க ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தது.
போகும் வழியில், அம்புலன்ஸின் அதிவேகமமும், திடீரெனப் போடப்பட்ட பிரேக்கினாலும் உள்ளே இருந்த இருவரும் அம்புலன்ஸின் உள்ளே விழுந்ததனால் காயம் அடைந்தார்கள். வயோதிபப் பெண்ணிற்கு முன்பல்லு ஒன்று உடைந்து இரத்தம் வழிந்தோடத் தொடங்கினும் அதைக் கணக்கெடுக்காத அம்புலன்ஸ் ஓட்டுனரும், உதவியாளரும் வெகும் கடுமையாக அவர்களுடன் நடந்து கொண்டார்கள் என்று நோயாளியின் உறவுகள் கவலை தெரிவித்தனர்.
வயதான நோயாளியை இறக்கிவிட்டு அவர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் கவலைக்குரியது என்றும் கூறினார்கள். மேலும், இந்த விதமாகத்தானா நோயாளிகளைப் பராமரிப்பதென்றும் கவலை தெரிவித்தனர்.
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House