6.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள  போதைப்பொருளுடன் இருவர் கைது

நெல்லியடி பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று செவ்வாாய் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 817 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

நேற்று நெல்லியடி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வடக்கு மற்றும் வடமத்திய கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது மோட்டார் சைக்கிளில் 817 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டது.

இதற்கிடையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 6.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டள்ளது.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பருத்தித்துறை மற்றும் குடத்தனை பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

6.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள  போதைப்பொருளுடன் இருவர் கைது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House