
posted 1st February 2022
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வீதியில் இருந்து தோணாவை ஊடறுத்துச் செல்லும் பாலத்தை புனரமைப்பு செய்வதற்கு கல்முனை மாநகர சபையின் பரிந்துரையில் கிழக்கு மாகாண சபையின் எல்.டி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் சுமார் 53 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்புனரமைப்பு வேலைத் திட்டம் நாளை வியாழக்கிழமை (03) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஆணையாளர் எம்.சி.அன்சார், எல்.டி.எஸ்.பி. திட்டத்தின் அம்பாறை மாவட்ட பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தற்போது பாவனையில் உள்ள சிறிய பாலமானது சுனாமி அனர்த்தத்தையடுத்து புதிதாக தற்காலிகமாக அமைக்கப்பட்டதாகும். அது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேதமடைந்திருப்பதால் வாகனங்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது.
இதையடுத்தே குறித்த பாலத்தை மீள் நிர்மாணம் செய்வதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House