
posted 23rd February 2022
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள் 3 அரசியல் கைதிகள் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றனர் , தீய செயல்களை ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டுக்களில் கடந்த 2020.07.03, 06 மற்றும் 2021.5.28ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த மூவரின் போராட்டத்துக்கும் ஆதராவாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House