2017 ஆம் ஆண்டு இளம் கர்ப்பவதி கொலையில்  சந்தேகநபர் கைது

2017 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை - கரம்பொன் பகுதியில் இளம் கர்ப்பவதி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுந்தீவை சேர்ந்த 36 வயதான சந்தேகநபர் கிளிநொச்சியில் வைத்துக் கைது செய்யப்பட்டாரெனப் பொலிஸார் கூறினர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தியபோது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரம்பொன் பகுதியில் கடந்த 2017 ஜனவரி 24 ஆம் திகதி ஞானசேகரன் ரம்சிகா என்ற இளம் கர்ப்பவதி கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் தொலைபேசி அழைப்புகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதற்கு அமைய மற்றுமொரு சந்தேகநபர் கைதானார்.

2017 ஆம் ஆண்டு இளம் கர்ப்பவதி கொலையில்  சந்தேகநபர் கைது

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House