17 வயது இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா பிரதேசத்தில் சந்திரகுமார் டிலக்ஷன்(வயது- 17) என்ற இளைஞன், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தன்று அவரின் தாயார் வைத்தியசாலைக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அயலவர்களின் உதவியுடன் வீட்டின் கதவினைத் திறந்து உட்சென்றபோது குறித்த இளைஞன் வீட்டின் அறையினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வானின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

17 வயது இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House