
posted 11th February 2022
மன்னார் மாவட்டத்தில் பெப்ரவரி மாதத்தில் (02.2022) பத்து தினங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி. வினோதன் அவர்களின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதன் மன்னார் மாவட்டத்தின் கொவிட் 19 தொடர்பாக வெளியிடும் நாளாந்த அறிக்கையில் 10.02.2022 அன்று அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
10.02.2022 அன்று மன்னார் மாவட்டத்தில் 18 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் மன்னார் பொது வைத்தியசாலையில் 8 நபர்களும், விடத்தல்தீவு வைத்தியசாலையில் 5 பேரும், பேசாலை, அடம்பன், வங்காலை, முருங்கன் வைத்தியசாலைகளிலும் மற்றும் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் தலா ஒருவருமாக மொத்தம் 18 பேர்; இத் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த மாதம் (02.2022) 313 பேர் இத் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் (2022) மொத்தமாக 514 பேரும் மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து மொத்தமாக இதுவரைக்கும் 3697 பேர் கொவிட் தொற்றாளர்களாகவும், இவற்றில் 37 பேர் இதன் மூலம் மரணத்தை தழுவியவர்களாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசிகள் முதலாவது மற்றும் இரண்டாவது முறையே 81422 மற்றும் 76082 பேர் போடப்பட்டிருக்கின்றபோதும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை 28283 பேரே போட்டுள்ளனர் எனவும் இவரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House