
posted 11th February 2022
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகப் பதிவாளர் ஏ.எல். ஜௌபர் சாதிக், பல்கலைக்கழக 14 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இறுதி நாள் அமர்வில் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் இந்த கௌரவ கலாநிதிப்பட்டத்தை இறுதி நாள் முதல் அமர்வின் போது பிரகடனம் செய்து வழங்கினார்.
ஆரம்பத்தில், பல்கலைக்கழக முகாமைத்துவ, வர்த்தக பீட, பீடாதிபதி கலாநிதி ஜனாபா. சித்தி சபீனா எம்.ஜீ.ஹஸன், கௌரவ கலாநிதி பட்டம் பெற்ற ஸ்தாபக பதிவாளர் ஏ.எல்.ஜௌபர் சாதிக் பற்றிய அறிமுக உரையை அமர்வில் ஆற்றினார்.
கிழக்கு மாகாணம் - சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட, கௌரவ கலாநிதிப்பட்டம் பெற்ற ஜௌபர் சாதிக், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றிய ஒருவராவார்.
1995இல் தென்கிழக்கு பல்கலைக்கழகம் உதயமாகியபோது அதன் ஸ்தாபக் பதிவாளராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இப்பல்கலைக்கழகத்தின் கல்வி, நிருவாக நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து அதன் ஒவ்வொரு செயற்பாட்டிலும் உபவேந்தரோடு இணைந்து செயற்பட்டதுடன்,
பூச்சியத்திலிருந்து நிருவாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதிலும் பெரும்பங்காற்றினார்.
இத்தகைய அவரது பெரும் சேவைகளுக்காக, மிகப் பொருத்தமான கௌரவ கலாநிதிப்பட்டத்தை அன்னாருக்கு வழங்குவதன் மூலம் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பெரும் உவகை கொள்வதாக பட்டமளிப்பின் போது தெரிவிக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House