
posted 14th February 2022

முபாறக் அப்துல் மஜீத்
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி பெரிதும் வரவேற்றுள்ளது.
இதுபற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
பிரதான வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் இத்திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன மற்றும் ஜப்பான் முதலான நாடுகளின் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுவதாக அரச தரப்பு கூறியுள்ளது.
சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, கூட்டாக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் தொடர்பில், நாடுமுழுவதுமுள்ள பாடசாலைகளின் அதிபர்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இன்றைய நவீன இன்டர்நெட் உலகில் மக்கள் பிரதான வெளிநாட்டு மொழிகளை தெரிந்திருப்பதன் மூலம் இணைய வழி தொடர்புகளை அதிகரித்து பொருளாதார வளத்தையும் பெருக்கும் சந்தர்ப்பம் உள்ளது. நமது நாட்டை சேர்ந்த பலருக்கு வெளிநாட்டு மொழிகள் தெரியாமை காரணமாக நல்ல தொழில் வாய்ப்புக்களையும் இழந்து வருகின்றனர்.
இந்த வகையில் அரசாங்கத்தின் இத்திட்டத்தை நாம் வரவேற்பதுடன் மேற்படி மொழிகள் பாடசாலை பாடத்திட்டத்திலும் கொண்டு வரப்பட்டு மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House