
posted 2nd February 2022

இரா. துரைரெத்தினம்
கொவிட் - 19 கொரோனாவின் புதிய வடிவமான ஓமிக்ரோன் தாக்கம் என்பது மிக ஆபத்தானவை. இதை மக்கள் நன்கு உணர்ந்து விழிப்பாக செயற்பட வேண்டும் இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா. துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொவிட் - 19 புதிய புரழ்வு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நிலமை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகள்
மாவட்டத்தில் சமூகத்திற்கு மத்தியில் கொவிட்- 19 கொரோனாவின் புதிய தொற்றின் தாக்கம் மக்களுக்குப் புரியவில்லையா? மூன்று தடவைகள் தடுப்பூசி செலுத்தியவர்களில் ஒரு சிலர் தொற்று காய்ச்சல் என இருப்பதும், மூன்று ஊசி செலுத்தாதவர்கள் காய்ச்சல் என்று இருப்பதும் சமூகத்திற்கு மத்தியில் பல சம்பிரதாய நிகழ்ச்சிகளும், சமூகத்தின் தேவைக்கேற்றவாறான நிகழ்ச்சிகளும் அரசு, நிறுவனங்களின் நிகழ்சிகளும், பாடசாலை தொடக்கம் அத்தியாவசிய தேவகைள், மரணவீடுகள் வரை மக்களின் நெருக்கமான வாழ்க்கை முறையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஆபத்தான கொவிட் - 19 ,கொரோனா ஓமிக்ரோன், என சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், சமூகத்திலுள்ளவர்களின் மீறல்களை எவ்வாறு கட்டுப் படுத்த முடியும்? ஆனால் அரச நிருவாகங்களோ, நிறுவனங்களோ தங்களின் நிருவாகத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சி நிரலை கட்டுப்படுத்த முடியும். இதே போல் சமூகத்திற்கு மத்தியில் நடைபெறும் மங்களகரமான நிகழ்ச்சிகள், புனித ஸ்தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள், துக்ககரமான சம்பவங்கள், அனாவசிய ஒன்று கூடல்கள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். இவைகளுக்கு அப்பால் போக்குவரத்து, ஏனைய அத்தியாவசியத் தேவைக்கான செயற்பாடுகள், தொழில் கடமைகள், நாளாந்த தொழில் செயற்பாடுகள் போன்றவற்றை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். கொவிட்- 19 கொரோனா (ஓமிக்ரோன்) காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிசமான வறுமையும், பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டதை எவராலும் மறுதலிக்கவும் முடியாது. குறிப்பிட்ட வருடத்திற்குள் ஈடு செய்யவும் முடியாது.
மாவட்டத்திலுள்ள சுகாதாரப் பிரிவு, ஏனைய இது தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள், பிரிவுகள், தனிநபர்கள் மிகவும் கடந்த காலங்களில் மிகவும் சிறப்பாக செயற்பட்டாலும், சமூகத்திற்கு மத்தியில் கொரோனாவின் பிரழ்வான ஒமிக்ரோன் தாக்கம் அதிகரித்தே காணப்படுகின்றது. ஒருபக்கம் சுகாதாரப் பிரிவினர் சிறப்பாக செயற்படுவதற்கு அரசு கொவிட் - 19 தொடர்பான பல தேவைகளை, குறைபாடுகளை உட்கட்டுமானப்பணிகளை அறைகுறையில் வைத்துக் கொண்டு தேவைகளை பூர்த்தி செய்யாமல் எவ்வாறு இங்குள்ளவர்களால் சிறப்பாக செயற்பட முடியும்?
இங்குள்ள சுகாதாரப் பிரிவினர் இரவு, பகல் பாராது முழு மூச்சாக சேவையில் ஈடுபடுவதோடு, தங்களது உயிர்களை பொருட்படுத்தாது, தங்களது குடும்பங்களைப் பொருட்படுத்தாது பலர் செயற்படுவது அவர்களின் சிறப்பான செயற்பாடுகளுக்கு முன்னுதாரணமாகும்.
மத்திய மாகாண அரசு மாவட்டத்திலுள்ள சுகாதார செயற்பாடுகளை கொவிட்- 19 (ஓமிக்ரோன்) தொடர்பான செயற்பாடுகளை முன் எடுத்துச் செல்வதற்கு முழு ஓத்துழைப்புக்களையும் மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House