
posted 15th February 2022

இரா. துரைரெத்தினம்
வரட்சியினால் பாதிப்படைந்த (2020,2021) மட்டக்களப்பு மாவட்ட நெற்செய்கை விவசாயிகளுக்கு விரைவாக நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர், பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா. துரைரெத்தினம் இவ்வாறு அரசாங்கத்தை கோரியுள்ளார்.
2020, 2021 ஏற்பட்ட வரட்சியின் காரணமாக பாதிப்படைந்த மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு எப்போது நஸ்டஈடு வழங்கப்படும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக ஒரு இலட்சத்தி எண்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளில் 2020 - 2021 பெரும்போக வேளாண்மை செய்கைபண்ணப்பட்டது.
இதில் அண்ணளவாக ஒரு இலட்சத்தி பத்தாயிரம் ஏக்கர் மழையை நம்பியும், ஏனைய எழுபத்தையாயிரம் ஏக்கர் உறுகாமம், உன்னிச்சை, நவகிரி, வாகனேரி, கித்துள், தும்பங்கேணி, அடைச்சகல், கண்டியனாறு, புளுக்குநாவி, கடுக்காமுனை, கங்காணியார்குளம், ஆணைசுட்டான்குளம், தரவை, மியான்கல்குளம், நற்பத்தாவெளி குளங்கள் உட்பட இன்னும் பல குளங்களை பயன்படுத்தி வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்படி வரட்சி ஏற்பட்டதன் காரணத்தினால் அண்ணளவாக இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் வேளாண்மைக் காணிகளில் முழுமையாகவும், பகுதிச் சேதமளவிலும் வேளாண்மைச் செய்கை பாதிப்படைந்துள்ளது.
இதேவேளை வரட்சியின் காரணமாக வேளாண்மைச் செய்கையில் பாதிப்படைந்த ஏனைய மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் அனைவருக்கும் நஸ்டஈடு வழங்கப்பட்டது. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை.
கடந்த வாரம் இப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறிப்பாக 50ற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு (250ற்கு மேற்பட்ட விவசாயக் காணிகள்) நஸ்டஈடு வழங்கி உள்ளதாகவும், ஏனைய மாவட்டத்திலுள்ள இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட காணிகளுக்கு நஸ்டஈடு விரைவாக வழங்குவதாகவும் இவ் அரசு அறிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
எனவே வரட்சியினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவாக நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House