வியாழக்கிழமை (24.02.2022) மன்னாரில் 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்டத்தில் வியாழக்கிழமை (24.02.2022) 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இம் மாதம் (பெப்ரவரி) தொற்றாளர்களின் எண்ணிக்கை 509 ஆக உயர்ந்துள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதனின் நாளாந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதன் தனது நாளாந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

24.02.2022 வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்தில் 12 பேர் மேலும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் மன்னார் பொது வைத்தியசாலையில் 3 பேரும், நானாட்டான் வைத்தியசாலையில் 4 பேரும், எருக்கலம்பிட்டி வைத்தியசாலையில் 3 பேரும், முருங்கன் வைத்தியசாலையில் 2 பேருமே இத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இந்த மாதம் (பெப்ரவரி) 509 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இத்துடன் இந்த வருடம் இத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 710 ஆகவும், இதுவரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 3893 பேர் கொவிட் தொற்றாளர்களாக கணிக்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை (24.02.2022) மன்னாரில் 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House