விபத்தில் இளைஞர் உயிரிழந்தார் - மழையின் தாக்கம் - விவசாயிகள் கவனம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அராலி செட்டியார்மடம் சந்தியில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்தில் உடையார்கட்டு – விசுவமடு பகுதியைச் சொந்த இடமாகக்கொண்டு, வட்டு மேற்கு – வட்டுக்கோட்டைப் பகுதியில் வசித்துவந்த கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்தார்.
வட்டு மேற்கு - வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ வசந்த் (வயது 20) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டுப்படுத்த முடியாத அதிவேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மழையின் தாக்கம் - விவசாயிகள் கவனம்

வடகிழக்கு பருவகாற்றின் தாக்கம் காரணமாக தற்போது நிலவும் மழையுடனான நிலை தொடரும் அதேவேளை எதிர்வரும் 19ஆம், 20ஆம், 21 ஆம் திகதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள வானிலை அவதான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை வடக்கு மாகாணத்தில் தொடரும்.

அதன் பின்னர் எதிர்வரும் 19ஆம், 20ஆம், 21 ஆம் திகதிகளிலும் கூடுதலாக வடக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.
வடகிழக்கு பருவகாற்றின் தாக்கத்தால் இந்த மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.

எனவே விவசாயிகள் மற்றும் ஏனையவர்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்-என்றுள்ளது.

விபத்தில் இளைஞர் உயிரிழந்தார் - மழையின் தாக்கம் - விவசாயிகள் கவனம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House