வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கே எமது போராட்டம்

எமது போராட்டம் எமது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கே இது தமிழக உறவுகளுக்கு எதிரானதல்ல என பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவ சமுதாய அமைப்பு போராட்டத்தின் ஐந்தாவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை போராட்டத்தை நிறைவு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வடபகுதி கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வரும் இந்திய படகுகளால் கடல்வளம் அளிக்கப்பட்டு வருகிறது. நித்தமும் எமது தொழில் வளங்களும் அழித்தும் சேதமாக்கப்பட்டும் வருவது தொடர்கதையாக நீடிக்கிறது. இக்கையறு நிலையில்தான் மீனவ சமுதாயம் தன்னை வருத்தி இன்றுடன் 5 நாட்களாக தொழில் மறிப்பு மற்றும் தொடர்சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தோம். இவ்விடத்திற்கு பொறுப்பான அமைச்சராக வடபகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் பதவி வகிக்கும் நிலையில் தான் இத் துயரம் நடந்தேறி வருகிறது.

அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வடபகுதி மீனவர் சமுதாயம் இதற்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு கோரி வந்துள்ளோம்.

நாம் கோருவது இலங்கைத்தீவின் வடக்கு கடற்பரப்பில் எல்லை மீறி நுழையும் இந்திய படைகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே.

இக் கோரிக்கையானது இலங்கையின் கடற்பரப்பின் மீதான இறையாண்மையை இலங்கை கடற்படை கட்டிக்காக்க வேண்டும் என்பதுடன், அதன் மூலம் வட பகுதி மீனவ சமுதாயத்தின் துயரத்திற்கு தீர்வையே வலியுறுத்தி நிற்கின்றது.

எமது நியாயமான இக் கோரிக்கையினை நிறைவேற்றும் உத்தரவாதத்தை தர முடியாத நிலையில் அமைச்சரால் எமது துயரத்துக்கு எவ்வாறு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இவ்விடத்துக்கு பொறுப்பானவர் என்ற வகையில் இந்தியப் படகுகளின் சட்டவிரோத உள்நுளைவை தடுக்க முடியாவிடில் அப்பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பது அர்த்தமில்லை என்பதே வடபகுதி மீனவ சமுதாயத்தினராகிய எமது உறுதியான நிலைப்பாடாகும். தமிழர் ஒருவர் அமைச்சராக இருந்தும் தீர்வு கிட்டாத நிலையில் எமது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம். அரசியல் கட்சி பேதமின்றி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எவ் விடயத்தின் காத்திரத்தன்மையை உணர்ந்து நிரந்தர தீர்வைக்காணும் வகையில் செயற்படுமாறு வலியுறுத்துகின்றோம்.

கடல் நீரோடு நீராக கரைந்து காணாமலே போகும் மீன்களின் கண்ணீர் துளிகளாக வட பகுதி மீனவ சமுதாயத்தின் துயரமும் எமக்குள்ளாகவே கரைந்தோடும் அவலம் தொடர்கிறது.

இத் துயரத்திற்கு நிரந்தர தீர்வைப் பெற்று எமது வாழ்வாதாரத்தையும், உயிர்களையும் பாதுகாக்குமாறு விநயமாக வேண்டி நிற்கின்றோம். இந்திய படகுகளின் எல்லை மீறலால் மீண்டும் ஒரு அனர்த்தம் வடக்கு கடலில் நிகழுமாயின் எமது போராட்டம் மீண்டும் அறவழியில் தொடரும். எமது இந்தப் போராட்டம் எமது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காகவே. தமிழக உறவுகளுக்கு எதிரானது அல்ல என வட பகுதி மீனவர்களின் கண்ணீர்க் கோரிக்கை என சுப்பர்மடம் மீனவ சமுதாய அமைப்பு போராட்ட நிறைவில் வெளியிட்டுள்ள அறிக்கையல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கே எமது போராட்டம்

எஸ் தில்லைநாதன் (வடமராட்சி நிருபர்)

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House