வாழ்வாதாரத்தை பாதிக்காத அபிவிருத்தியை ஆதரிப்பார்கள் மன்னார் மக்கள் - அருட்பணி ஞானப்பிரகாசம்
வாழ்வாதாரத்தை பாதிக்காத அபிவிருத்தியை ஆதரிப்பார்கள் மன்னார் மக்கள் - அருட்பணி ஞானப்பிரகாசம்

அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார்

மன்னார் மாவட்டத்துக்கு கொண்டுவரும் அபிவிருத்திக்கு இங்குள்ள மக்கள் எதிரானவர்கள் அல்ல. மாறாக மக்களின் வாழ்வாதாரத்தின் பாதிப்புகளுக்கான அபிவிருத்தியையே மக்கள் எதிர்க்கின்றனர் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் மேற்கொள்ளப்பட இருக்கும் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத்தை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கையாக மன்னார் மக்களுக்கு விழப்புணர்வை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைளின் ஒன்றாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தலைமையில் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை கொண்ட குழு மன்னாருக்கு சனிக்கிழமை (12.02.2022) வருகை தந்திருந்ததபோது மன்னார் பிரஜைகள் குழுவினரை இக் குழு சந்தித்தது.

இதன்போது அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் இங்கு தொடர்ந்து கருத்துக்களை முன்வைக்கையில்;

பல நூற்றாண்டு காலமாக மன்னார் மக்கள் முக்கியமான எவ்வித அபிவிருத்தியும் காணாத நிலையிலேயே இருந்து வருகின்றனர். இருந்தும் அமைதியுடன் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் தற்பொழுது அபிவிருத்தியை சிந்திக்க முடியாத நிலையில் மன்னார் மக்கள் குறிப்பாக மன்னார் தீவு மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

மன்னார் தீவு 25 கிலோ மீற்றர் தூரமும் 4 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட நான்கு பக்கங்களாலும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவு. தற்பொழுது இது தீண்டப்பட்டு வருகின்றது. கனியவள மணல் அகழ்வு ஒருபுறமிருக்க தற்பொழுது மன்னார் தீவில் மக்கள் செறிந்து வாழும் அயலில் பொருத்தப்பட்டுள்ள 36 காற்றாலைகளால் மீனவ சமூகம் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் பிறக்கும் குழந்தைகள் கூட குறைபாட்டுடன் பிறக்கும் நிலையும் தோன்றியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 30 வீதமாக மீன்பிடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும், அது உண்மையாக இருந்தாலும், ஆனால் மன்னார் தீவில் காற்றாலைகள் பொருத்தப்பட்டபின் மீன்பிடி பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதே உண்மையான விடயமாகும்.

காற்றாலைகளின் ஒலி நிழல், இதன் அதிர்வு தன்மைகள் போன்ற நிலையால் கடந்த காலங்களில் கரை வந்த மீன்கள் எல்லாம் தற்பொழுது தடைப்பட்ட சம்பவங்களாகவே காணப்படுவதாக மீனவ சமூகம் தெரிவிக்கின்றது

இதனால் கரையோர மீனவர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். மன்னார் தீவில் காற்றாலை அமைக்கப்பட்டிருந்த இடங்களில் எல்லாம் முன்பு கடல் உட்புகாத தன்மையில் இருந்த மணல் திட்டிகள் மற்றும் கடலோரத்தில் இருந்து வந்த அடம்பன் கொடி போன்ற தாவரங்கள் எல்லாம் அழிந்துபோன நிலையில் காட்சியளிக்கின்றது.

இதற்கெல்லாம் நாங்கள் உங்களுக்கு அத்தாட்சிப்படுத்த இயலாதிருந்தாலும், மீனவர்களால் இவைகள் தெளிவாக விளக்கம் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

பறவைகள் காற்றாலை பக்கம் வருகின்றபோது சுழலும் காற்றாலைகளை அச்சமயம் நிறுத்துவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் நாளாந்தம் இ க் காற்றாலைகளால் அயலிலுள்ள மக்களுக்கு இதன் சத்தம் நாளாந்தம் தொல்லையாக இருப்பதாக எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நான் முதலில் இவைகளின் பாதிப்புகளை உணராதிருந்தபோதும் தற்பொழுது பேசாலை பகுதிக்கு பங்கு தந்தையாக சென்ற பின்பே இதன் தாக்கங்களை உணரக்கூடியதாக இருக்கின்றது.

இந்த காற்றாலைகளால் மட்டும் மன்னார் தீவில் பிரச்சனை இல்லை. மாறாக கனியவள மணல் அகழ்வு, எண்ணெய் பரிசோதனை, போதைப் பொருள் கடத்தல் போன்ற இவ்வாறான பிரச்சனைகளால் மன்னார் தீவு பாரிய பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டு வருகின்றது.

எமது மக்கள் எந்த அபிவிருத்திக்கும் எதிரானவர்கள் அல்ல, மாறாக மக்களை பாதிக்கக்கூடிய அபிவிருத்திகளை எற்றுக்கொள்ள தயாராக அவர்கள் இல்லை.

ஆகவே இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் எனவும் மக்கள் சார்பில் வேண்டி நிற்கின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் இவ்வாறான காற்றாலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமானால் மன்னா,ர் மதவாச்சி ஆகிய இடங்களுக்கிடையே மக்கள் செறிந்து வாழாத இடங்கள் காணப்படுவதால் அவ்வாறான இடங்களை தெரிவு செய்து இத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான பரிசோதனையை மேற்கொள்வது நலம் என நாங்கள் நினைக்கின்றோம்.

ஆகவே மன்னாருக்கு எவ்வாறான திட்டங்களையும் முன்னெடுக்கும்போது இங்குள்ள மக்களை பாதிக்காத தன்மையில் மக்களுடன் கலந்தாலோசித்து மேற்கொள்வதே சிறந்தது என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் தெரிவித்தார்.

வாழ்வாதாரத்தை பாதிக்காத அபிவிருத்தியை ஆதரிப்பார்கள் மன்னார் மக்கள் - அருட்பணி ஞானப்பிரகாசம்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House