
posted 25th February 2022
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிபப் பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
அப்பெண் தனிமையில் இருந்தவேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பூ சாடியால் அடித்துக்கொலை செய்த பின்னர், அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், கொலை நடந்த வீட்டுக்கு அருகில் இருந்த சி.சி.ரி.வி காணொளிகள் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
காணொளியில் கொலை சந்தேக நபர் சைக்கிளில் தப்பிச் செல்லும் காட்சியின் அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்திய பொலிஸார் யாழ்ப்பாணம் முலவை எனும் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House