யாழில் அரசு ஊழியர்களின் உரிமைக் கோரிக்கைகள்

யாழில் அரசு ஊழியர்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து துண்டுப்பிரசுர விநியோகமொன்று மேற்கொள்ளப்பட்டது.

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் மற்றும் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 7:30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் இடம்பெற்றது.

அரச ஊழியர்களின் சம்பளத்தை 15,000 ரூபாவால் அதிகரிக்குமாறும், பதவி உயர்வு முறையொன்றையும் கடமைப் பட்டியலும் அடங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பொன்றைத் தயாரிக்குமாறும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பொன்றைத் தயாரிக்குமாறும், சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களினதும் பறிக்கப்பட்ட சேவைக் காலத்தை நிரந்தர சேவையில் இணைக்குமாறும், 2016 இன் பின்பு அரச சேவைக்கு வந்த அனைவரினதும் பறிக்கப்பட்ட ஓய்வூதிய உரிமையை மீண்டும் வழங்குமாறும் கோரி இந்த துண்டுப்பிரசுர விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.

யாழில் அரசு ஊழியர்களின் உரிமைக் கோரிக்கைகள்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House